பத்மஸ்ரீக்கு தகுதியானவன் நான் இல்லை – ராஜ மௌலி

கர்நாடகத்தில் பிறந்தவரான ராஜமெளலிக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்த பதிவு:
என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருவிதமான உணர்வுகளோடு இருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்னைப் பொருத்தவரை, இந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை. இந்த கவுரவத்தைப் பெறும் அளவுக்கு நான் கலைப் படைப்புகளைத் தந்துவிடவில்லை. இது தன்னடக்கம் அல்ல.


ராமோஜி ராவ், ரஜினிகாந்த் இருவரும் பத்ம விபூஷண் தகுதியானவர்கள். அவர்களது பணி வரும் எதிர்கால தலைமுறைகளுக்கும் ஊக்கம் தரும். அத்தகைய மகத்தானவர்களுடன் இந்த விருதைப் பெறுவதில் பூரிப்படைகிறேன். அவர்களுடன் விருதைப் பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்துள்ளது என்பதால் என்னால் மறுக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு ஆந்திர அரசு என் பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்க இருந்தார்கள். என்னுடைய தொடர்ச்சியான வற்புறுத்தலால் என் பெயரை நீக்கினார்கள். ஆனால், இந்த ஆண்டு கர்நாடக அரசால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறேன். என்னிடம் அவர்கள் கருத்து எதையும் கேட்கவில்லை. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. நான் பிறந்தது கர்நாடகம், படித்தது ஆந்திரம், பணியுடன் வசிப்பது தமிழ்நாடு மற்றும் தெலங்கானா. இந்த அனைத்து மாநிலங்களின் மகனாக இருப்பதில் மகிழ்ச்சிஎன்று கூறியிருக்கிறார் ராஜமெளலி